Posts

சாபம் இறங்கப்படலாம்!

Views
Image
இதோ இந்த வருடமும் மூன்று குழந்தைகள் இறந்திருக்கிறது.  மூன்றும் நன்றாக படித்து வந்த ஏழைக் குழந்தைகள்.  தம் ஏழைக் குடும்பங்களின்  எதிர்காலத்திற்காக அப்பிள்ளைகள் சுமந்திருந்த எத்தனையோ கனவுகள், தன் துயரங்களை எல்லாம் துடைக்கப் போகிறார்கள் என்று அந்த குடும்பங்கள்  வைத்திருந்த எத்தனையோ நம்பிக்கைகள், கண்டிருந்த கனவுகள் எல்லாம் இதோ நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது!! Pic source: BBC Tamil கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் இது நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு வரும்போது நமக்கும் சேர்த்து பதட்டம் தொற்றிக் கொள்கிறது.  ஒன்றல்ல.. இரண்டல்ல.. இந்த ஐந்து  ஆண்டுகளில் நீட் தொடர்பாக இதுவரை 16 மாணவர்கள் மாண்டிருக்கிறார்கள் என்பதனை எப்படி நம்மால் சுலபமாக கடந்து செல்ல முடிகிறது...?? ஒவ்வொரு ஆண்டும்  இந்த செய்திகள் கேள்விப்படும்போது நம் மனநிலையும் சேர்ந்து  பாதிப்புக்குள்ளாகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா..? எவ்வளவு எதிர்மறையான சூழலில் நாம் வாழ்கிறோம்..! அத்தனையும் அப்பாவி குழந்தைகள்.. அந்த குடும்பத்தின், இந்த நாட்டின், இந்த நாட்டு மக்களின் வருங்கால செல்வங்கள்...

ஏன் இந்த தயக்கம்..?

Views
Image
PSBB பள்ளி விவகாரத்தை முதலில் வெளியில் கொண்டு வந்தது ஒரு முன்னாள் மாணவி, அதற்குப் பிறகு சென்னை சேத்துப்பட்டு மஹாரிஷி வித்யா மந்திர் என்ற பள்ளியின் ஆசிரியர் மீது பாலியல் புகார்களை கொடுத்ததும் முன்னாள் மாணவர்கள், அதே போல் மேட்டுப்பாளையம் SSVM என்ற பள்ளியின் ஒரு ஆசிரியர் ஒரு முன்னாள் மாணவியுடன் ஃபேஸ்புக்கில் நடத்திய பாலியல் அரட்டையைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியதும் அந்த முன்னாள் மாணவி தான்.  இந்த புகார்களில் எல்லாம் ஒரு முக்கிய விஷயத்தை கவனித்தீர்களா..? இந்த சில நாட்களில் வெளிவந்த பெரும்பாலனா புகார்களை சொன்னது எல்லாமே முன்னாள் மாணவிகள் தான்! அப்படி என்றால் அந்த ஆசிரியர்களைப் பற்றி ஏன் இந்நாள் மாணவிகள் யாரும் வாய் திறக்கவில்லை..?  அவைகள் இப்போது நடப்பது இல்லையா அல்லது இந்நாள் மாணவிகளுக்கு அதனை வெளியே சொல்ல பயமா..? இந்த செய்திககளைப் பார்த்ததும் எனக்கு உடனே எழுந்த கேள்வி இது தான்.  Image source: drsuneettayal.com/Google images PSBB விவகாரத்தில் இந்நாள் மணவிகள் தான் அந்த முன்னாள் மாணவிக்கு புகார்களை கொண்டு சென்று, பிறகு அம்மாணவி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அது வைரல் ஆகி, பலர...

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...

Views
Image
என்னுடைய அனுபவக் குறிப்புகளுக்குள் செல்லும்முன் முதலில் இந்த மருத்துவரின் இந்த காணொளியை காணுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, எப்பொழுது மருத்துவமனையை அணுகவேண்டும், என்ன சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என்று எளிதாக, தெளிவாக விளக்குகிறார்.   https://www.youtube.com/watch?v=Z-GP-masaV0   இனி என்னுடைய அனுபவக் குறிப்புகள்   1. இன்றைய தேதியில் காய்ச்சல் வந்தால், அது பெரும்பாலும் கொரானா தான்.  உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள். அரசு எடுக்கும் இலவச டெஸ்ட் என்றால் பாசிட்டிவ் என்றால் கார்பரேசனில் இருந்து உங்களை 2 நாட்களுக்குள் போனில் அழைப்பார்கள்.  2 நாட்கள் ஆனாலும் அழைப்பு வரவில்லை என்றால் நெகடிவ் என்று அர்த்தம். (போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்து கொள்ளவும். போனை மனைவி அல்லது மற்றவர்களிடம் தந்து விட்டு நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்). 2. உடனடியாக ரிசல்ட் தேவைப்படுபவர்கள் தனியார் மருத்துவமனை / லேபுகளுக்கு சென்று டெஸ்ட் கொடுங்கள். இடத்தை பொறுத்து ரூ.1000 லிருந்து 2000 வரை ஆகும். அதிகபட்சம் 8 மணி நேரத்திற்குள் பாஸிட்டிவ் அல்லத...

நம்ம வீட்டுப் பிள்ளை

Views
Image
"சொந்தங்களை மாதிரி யாரும் சந்தோசப்படுத்தவும் முடியாது.. சொந்தங்களை மாதிரி யாரும் கஷ்டப்படுத்தவும் முடியாது..!!" இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு ஞாயிறு அன்று பல நாட்களுக்குப் பின்னால் எங்கள் நெருங்கிய சொந்தங்களுடன் பெற்றோர்கள் வசிக்கும் வீட்டில் ஒரு கேதரிங் நடந்தது.  அனைவரும் சேர்ந்து படம் பார்த்து வெகு நாட்கள் ஆனதால் மதிய உணவுக்குப் பிறகு OTT யில் ஒரு படம் பார்க்க முடிவு செய்தோம். அப்போது இந்தப் படம் என்னுடைய அக்கா மகளாலும், அவருடைய கணவராலும் என்னிடம் பரிந்துரைக்கப்பட்டது.  இப்படம் ரிலீஸ் ஆனபோதே அக்கா மகளும், சொந்தங்களில் உள்ள சில இளவட்டங்களும் என்னிடம் இப்படத்தைப் பார்க்க சொன்ன போது.. காரணம் கேட்டதற்கு.. அண்ணன் - தங்கை பாசம் கதை என்றார்கள்.. "ம்க்கும்.. எவன் இதற்கெல்லாம் *நேரத்தை வேஸ்ட்* பண்ணுவான்..!!" என்று மனதில் எண்ணிக்கொண்டு அந்த ஒரு காரணத்திற்காகவே அப்படத்தை தவிர்த்து வந்தேன். ஆனால் அன்றும் அப்படம் பரிந்துரைக்கப்பட்டது. நான் ஒரு காமடி படம் பாக்கலாம் என்றேன், மனைவி வழக்கம்போல் திரில்லர் என்றார், அம்மாவும் ஏற்கனவே இப்படம் பார்த்து விட்டதால் வேண்டாம் என்றார், ஆனாலும...

ஆன்லைன் வகுப்பு அட்டகாசங்கள்..!

Views
அன்று காலை மேக மூட்டத்துடன் சிறிதாக தூறிக் கொண்டிருந்தது.. ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் இளைய மகளின் வகுப்பு தோழிகளின் வாட்ஸ்அப் க்ரூப்பில் தோழி ஒருத்தி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தாள்.. "இன்னைக்கு க்ளாஸ் இருக்கா...???"    😂😂 ****** எதிரே உட்கார்ந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த பெரிய மகள் திடீரேன்று சிரித்தார்... "என்னம்மா ஆச்சு...?" "இல்ல வாப்பா.. சார் அங்க யூடூப் ஓப்பன் பன்றார்.. எர்துகிருள் உருது வருது வாப்பா.. அப்போ அவரும் எர்துகிருள் பாக்கறாரா...???" 😀😀 ******  "இவளக ஒன்னு.. எந்த ரூமுக்கு போனாலும் வீடியோவை ஆன் பண்ணிட்டு மனுசன ஃப்ரீயா போக வர விடாம...." என்று  மகள்களை நொந்து கொண்டே ஸ்கார்ப் தேடும் மனைவி.   அதாவது பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளின் போது பேக்ரவுண்டில் சில அப்பாக்கள் டிங்கினி மங்கினியாக கூட உலா வரமுடியும்.. ஆனால் அம்மாக்கள் வீட்டில் அணியும் சாதாரண ஆடையில் கூட உலா வரமுடியாது என்று சொல்லாமல் சொல்லி செல்கிறார் மனைவி.   😊😊 ******  எங்கள் tena...

கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Views
Image
உலகம் இதுவரை பார்த்திராத ஒரு கொள்ளை நோயையும், அதனால் மனித குலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் நாம் கண் கூடாக கண்டு கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலிலும், இன்னும் வளர்ச்சி அடையாத நாடான இந்தியா போன்ற நம் நாடு ஒரு கொள்ளை நோய் பரவும்போது வரும் படிநிலைகளில் ஏற்கனவே இரண்டாவது கட்டத்தை அடைந்து அடுத்து வரும் மூன்றாவது மற்றும் அபாய கட்டமான Community Transmission என்ற சமூகங்களுக்குள் பரவுதல் என்ற கட்டத்தை  அடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் இந்த முக்கிய காலகட்டத்தில்.. இக்கொள்ளை நோயிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும், நம் வாழும் சமூகத்தையும் காக்க நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பற்றி தான் கீழே சுருக்கமாகவும், காணொளியில் விளக்கமாகவும் சொல்லியிருக்கிறேன். தனிமைப் படுத்துதல் (Lock-down/Self-Quarantine):   முடிந்த அளவு வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்ப்பது. முடிந்தவர்கள் தனது பணிகளை வீட்டில் இருந்து செய்வது (Work from home). தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது (Avoid non-essential ...

தவறான முன்னுதாரணம்..!

Views
Image
Yes, The smallest coffins are the heaviest! :(   ஒரு இரண்டு வயதுக் குழந்தை இந்த மொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக துடித்து இறந்திருக்கிறது.  இந்த துயர சம்பவத்திற்கு யார் காரணம் என்று எந்த ஒரு சரியான விசாரணையும் மேற்கொள்ளாமல் சிறுவனின் பெற்றோர்களுக்கு நிதி வழங்கியது ஒரு தவறான முன்னுதாரணம்.  இது ஏதோ.. அரசால் பொது இடத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணறில் விழுந்து அக்குழந்தை இறக்கவில்லை.  மாறாக குழந்தை தன் பெற்றோர்களின் சொந்த நிலத்தில் அவர்களால் போடப்பட்ட கிணறில் விழுந்து இறந்திருக்கிறது.  அதனால் பெற்றோர்களின் அலட்சியம் தான் இதற்க்கு காரணம், அதனால் அவர்கள்  தண்டிக்கப் படவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.  இல்லை.. இது தெரியாமல் நடந்த விபத்து, இதற்கு பெற்றோர்களைக் காரணமாக்க முடியாது என்று வேறு சிலரும் கூறுகிறார்கள். பெற்றோர்களும் அது ஏழு வருடத்திற்கு முன்பாக போடப்பட்டு பிறகு மூடப்பட்ட ஆழ்துளை கிணறு. அதன் மேல் ட்ராக்டர் எல்லாம் ஒட்டி இருக்கிறோம்.  சமீபத்தில் பெய்த மழையால் தான் அந்தப் பகுதியின் மண் உள்வாங்கி ...

சந்திரயான் 2 க்காக தமிழகம் தந்த 'கொஞ்சம் நிலவு'!

Views
Image
இதுவரை எந்த நாடும் சென்றிராத நிலவின் தென் துருவப் பகுதிக்கு ஆய்வுகள் செய்ய முதன் முதலில் செல்லும் சந்திரயான் 2   விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியர்கள் அனைவரும் மட்டுமல்ல, விண்வெளியின் அதியசங்களை, இரகசியங்களை தெரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு மனிதனும் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்றால் அது மிகையாகாது.  அதற்காக உழைத்த இஸ்ரோவின் (ISRO) அனைத்து உறுப்பினர்களுக்கும், உறுதுணையாக நின்ற அனைவருக்கும் பாராட்டுகள் உரித்தாகட்டும்.   இந்த திட்டத்தின் நோக்கம் என்ன, ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது, எப்படி இது வேறு யாரும் செய்திராதது போன்ற தகவல்களைப் பற்றியெல்லாம் நாம் இங்கே பேசப் போவதில்லை. அவைகளைப் பற்றி தெரியாதவர்கள் வேறு செய்தி தளங்களில் படித்துக் கொள்ளலாம்.  ஆனால்.. இந்த மகிழ்ச்சிகரமான வேளையில்.. இந்த சாதனை பயணத்திற்கான ஏற்பாடுகளில் நடந்த ஒரு சுவராஸ்யமான,  குறிப்பாக தமிழர்கள் மகிழக்கூடிய ஒரு சம்பவத்தை பற்றித் தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.    சந்திரயான்  2 விண்ணில் ஏவப்படும் காட்சி நிலவுக்கு சென்று ஆய்வு செய்...

சிஸ்டம் எவ்வளவு சரியில்லை என்று தெரியுமா..???

Views
Image
சிஸ்டம் சரியில்லைதான். ஆனால் அது எவ்வளவு சரியில்லை என்று தெரியுமா..? சம்பவம் 1: குப்பைகளை எடுக்கும் மாநகராட்சி தொழிலாளர்களின் உடையில் எழுதியிருந்த "குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரியுங்கள்" என்ற வாசகத்தை கண்டு... அப்படி பிரிக்காமல் மக்கும் குப்பை மற்றும் (பிளாஸ்டிக் போன்ற) மக்கா குப்பை என்று அனைத்தையும் நாம் சேர்த்தே போடுவதால் அதனை பின்னால் பிரிப்பவர்களுக்கு ஏற்படும் சிரமமும், அதனால் அரசுக்கும், பூமிக்கும் ஏற்படும் நஷ்டங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு அவ்வாசகத்தை கண்ட அன்றே மனைவி, மக்களை அழைத்து தரம் பிரிப்பதன் தேவைகளை வலியுறித்தி இரண்டு குப்பை கூடைகளை (Dust bins) வைத்து அதனை வீட்டில் செயல்படுத்தி விட்டோம்.  பிள்ளைகளும், நாங்களும் ஆர்வமாக குப்பைகளை போடும்போதே தரம் பிரித்து போட்டு வந்து.. குப்பை வண்டி வந்ததும், அவர்களிடம் இரண்டு கூடைகளையும் கொண்டு போய் கொடுத்தால்.. அதனை இரண்டையும் வாங்கி வண்டியில் ஒரே குப்பையில் போடுகிறார்கள்.. ஏன் என்று கேட்டால்.. அப்படி தரம் பிரித்து வாங்கும் வண்டி FC க்கு சென்றுள்ளதாம்.. அது வரும் வரை இவ்வண்டியில் தான் வாங்குவார்களாம்.   ...

பேருவுகை!

Views
Image
சில தினங்களுக்கு முன் குழந்தைகளுக்கு பெருநாள் உடைகள் எடுக்க கோவை, காந்திபுரத்தில் இருக்கும் "ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்" சென்றிருந்தோம்.  அங்கே அன்று வாடிக்கயாளர்களாக எங்களை போல் ஈதுக்கு துணி எடுக்க வந்த முஸ்லிம்கள் தான் அதிகம் இருந்தனர்.  துணிகளை எடுத்து, அங்கேயே alteration எல்லாம் கொடுத்து அதை வாங்கி முடிப்பதற்குள் நோன்பு திறக்கும் நேரம் வந்து விடவே.. வீடுக்கு செல்வதற்குள் நேரம் ஆகிவிடும் என்பதால்.. இது போன்ற பெரிய கடைகளில் நோன்பு திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய்பட்டிருக்குமென்பதால் அங்கேயே நோன்பு திறக்க முடிவு செய்தோம்.  நோன்பு திறக்கும் இடத்திற்க்கு நாங்கள் சென்றபோது அங்கு கண்ட காட்சி.. அப்பப்ப்பா.. கண் கொள்ளா காட்சி அது!  அவர்கள் காட்டிய வழியில் நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது முதலில் கடையின் அருகில் ஒரு இடத்தில் கிட்டத்தட்ட முன்னூறு பேர்கள் உட்கார்ந்து நோன்பு திறக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அந்த இடம் முன்னமே நிரம்பி விட்டிருந்தது.  எங்களை பக்கத்தில் இருக்கும் இன்னொரு கட்டடத்தின் முதல் மாடிக்கு போகச் சொன்னார்கள்.  அங்கேய...

நிலாவுக்குப் பக்கத்தில் ஒரு பலா!

Views
Image
நி லாவைக் காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய காலம் முடிந்தது..  இனி Coca-cola, KFC and McDonalds போன்ற கம்பனிகளின் லோகோக்களை, விளம்பரங்களைக் காட்டி சோறு ஊட்டும் காலம் இது..! புரியவில்லையா...? விரைவில் அது போன்ற பெரிய கம்பனிகளின் லோகோக்கள், விளம்பரங்கள் நமக்கு வானத்தில் தெரியப் போகிறது.   Pic credit: The Hindu\Reuters\StartRocket StartRocket , என்ற ரஸ்யா startup ஒன்று விண்வெளியில் விளம்பரங்களை போடப் போகிறதாம்.  அதற்காக ஒரு 200 மிகச் சிறிய செயற்கைக்கோள்களை அனுப்பி, அவைகளை ஒரு grid போல ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, அதன் மூலம் சூரிய ஒளியை நமக்கு எதிரொலிக்க செய்து, அதன் மூலம் எழுத்துகளையும், படங்களையும் அங்கிருந்து படம் காட்டப் போகிறார்களாம். உதாரணத்திற்கு KFC என்ற எழுத்தை காட்ட வேண்டுமானால்.. K என்ற எழுத்தின்  உயரம் மட்டும் 3.75 kms வருமாம். சென்ற வாரம் இதற்கான promo வீடியோ விட்டுருக்காங்க. ஆனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதனை bad idea என்கிறார்கள்.  "ஏறத்தாள 20,000 க்கு மேற்பட்ட மனிதனால் அனுப்பப்பட்ட சாதனங்கள் தற்...

ஜமால் ஹாஷோக்கி எங்கே...? - பகுதி 4

Views
Image
#WhereIsJamalKhashoggi சரி.. சவூதி ஒத்திகிருச்சு.. எல்லாப் பிரச்சினையும் முடிஞ்சிருச்சு.. இனி துருக்கியும், மற்ற நாடுகளும், ஊடகங்களும் அவங்கவங்க வேலையை பாக்க போயிருவாங்கங்கன்னு தான் நினைச்சேன்..  ஆனால்.. இதற்குப் பிறகு தான் சினிமாக்களை மிஞ்சும் அளவுக்கு சில அதிர்ச்சிகர புதிய தகவல்கள் எல்லாம் துருக்கியின் புலனாய்வுகளின் மூலம் வெளியே வந்து கொண்டிருக்கிறது.   துருக்கியின் முதல் அறிவிப்பு சவூதி அரசாங்கம் “ஹாஷோக்கி இறந்தது ஒரு விபத்து..” என்ற ரீதியில் அறிக்கை வெளியிட்டதர்க்குப் பிறகு அக்டோபர் 18 - 20ம் தேதி வாக்கில் முதன் முதலாக துருக்கி அரசு ஒரு அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறது.  அதாவது அக்டோபர் 23ம் தேதி ஹாஷோக்கியின் இறப்பு பற்றி ஒரு Naked truth ஐ அதாவது ஒரு வெட்ட வெளிச்ச உண்மையை உலகிற்கு அறிவிக்க போகிறோம் என்று ஒரு அறிக்கை விட்டது.  உலகம் மீண்டும் பரப்பரபாகியது.  ஆனால் அதற்க்கு முன்பு அதனை விட மிக அதிர்ச்சியான தகவல் ஒன்று உலகிற்க்கு காத்திருந்தது.  துருக்கி சொன்ன அந்த 23ம் தேதிக்காக எல்லாரும் ஆவலுடன் காத்துக் கொண்...