Posts

Showing posts from 2021

சாபம் இறங்கப்படலாம்!

Views
Image
இதோ இந்த வருடமும் மூன்று குழந்தைகள் இறந்திருக்கிறது.  மூன்றும் நன்றாக படித்து வந்த ஏழைக் குழந்தைகள்.  தம் ஏழைக் குடும்பங்களின்  எதிர்காலத்திற்காக அப்பிள்ளைகள் சுமந்திருந்த எத்தனையோ கனவுகள், தன் துயரங்களை எல்லாம் துடைக்கப் போகிறார்கள் என்று அந்த குடும்பங்கள்  வைத்திருந்த எத்தனையோ நம்பிக்கைகள், கண்டிருந்த கனவுகள் எல்லாம் இதோ நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது!! Pic source: BBC Tamil கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் இது நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு வரும்போது நமக்கும் சேர்த்து பதட்டம் தொற்றிக் கொள்கிறது.  ஒன்றல்ல.. இரண்டல்ல.. இந்த ஐந்து  ஆண்டுகளில் நீட் தொடர்பாக இதுவரை 16 மாணவர்கள் மாண்டிருக்கிறார்கள் என்பதனை எப்படி நம்மால் சுலபமாக கடந்து செல்ல முடிகிறது...?? ஒவ்வொரு ஆண்டும்  இந்த செய்திகள் கேள்விப்படும்போது நம் மனநிலையும் சேர்ந்து  பாதிப்புக்குள்ளாகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா..? எவ்வளவு எதிர்மறையான சூழலில் நாம் வாழ்கிறோம்..! அத்தனையும் அப்பாவி குழந்தைகள்.. அந்த குடும்பத்தின், இந்த நாட்டின், இந்த நாட்டு மக்களின் வருங்கால செல்வங்கள்..!!!  ப்ச்ச்... அவர்களும் நம் பிள்ளைகள் போன

ஏன் இந்த தயக்கம்..?

Views
Image
PSBB பள்ளி விவகாரத்தை முதலில் வெளியில் கொண்டு வந்தது ஒரு முன்னாள் மாணவி, அதற்குப் பிறகு சென்னை சேத்துப்பட்டு மஹாரிஷி வித்யா மந்திர் என்ற பள்ளியின் ஆசிரியர் மீது பாலியல் புகார்களை கொடுத்ததும் முன்னாள் மாணவர்கள், அதே போல் மேட்டுப்பாளையம் SSVM என்ற பள்ளியின் ஒரு ஆசிரியர் ஒரு முன்னாள் மாணவியுடன் ஃபேஸ்புக்கில் நடத்திய பாலியல் அரட்டையைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியதும் அந்த முன்னாள் மாணவி தான்.  இந்த புகார்களில் எல்லாம் ஒரு முக்கிய விஷயத்தை கவனித்தீர்களா..? இந்த சில நாட்களில் வெளிவந்த பெரும்பாலனா புகார்களை சொன்னது எல்லாமே முன்னாள் மாணவிகள் தான்! அப்படி என்றால் அந்த ஆசிரியர்களைப் பற்றி ஏன் இந்நாள் மாணவிகள் யாரும் வாய் திறக்கவில்லை..?  அவைகள் இப்போது நடப்பது இல்லையா அல்லது இந்நாள் மாணவிகளுக்கு அதனை வெளியே சொல்ல பயமா..? இந்த செய்திககளைப் பார்த்ததும் எனக்கு உடனே எழுந்த கேள்வி இது தான்.  Image source: drsuneettayal.com/Google images PSBB விவகாரத்தில் இந்நாள் மணவிகள் தான் அந்த முன்னாள் மாணவிக்கு புகார்களை கொண்டு சென்று, பிறகு அம்மாணவி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அது வைரல் ஆகி, பலராலும் கண்டிப்ப

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...

Views
Image
என்னுடைய அனுபவக் குறிப்புகளுக்குள் செல்லும்முன் முதலில் இந்த மருத்துவரின் இந்த காணொளியை காணுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, எப்பொழுது மருத்துவமனையை அணுகவேண்டும், என்ன சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என்று எளிதாக, தெளிவாக விளக்குகிறார்.   https://www.youtube.com/watch?v=Z-GP-masaV0   இனி என்னுடைய அனுபவக் குறிப்புகள்   1. இன்றைய தேதியில் காய்ச்சல் வந்தால், அது பெரும்பாலும் கொரானா தான்.  உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள். அரசு எடுக்கும் இலவச டெஸ்ட் என்றால் பாசிட்டிவ் என்றால் கார்பரேசனில் இருந்து உங்களை 2 நாட்களுக்குள் போனில் அழைப்பார்கள்.  2 நாட்கள் ஆனாலும் அழைப்பு வரவில்லை என்றால் நெகடிவ் என்று அர்த்தம். (போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்து கொள்ளவும். போனை மனைவி அல்லது மற்றவர்களிடம் தந்து விட்டு நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்). 2. உடனடியாக ரிசல்ட் தேவைப்படுபவர்கள் தனியார் மருத்துவமனை / லேபுகளுக்கு சென்று டெஸ்ட் கொடுங்கள். இடத்தை பொறுத்து ரூ.1000 லிருந்து 2000 வரை ஆகும். அதிகபட்சம் 8 மணி நேரத்திற்குள் பாஸிட்டிவ் அல்லது நெகடிவ் என்று ரிசல்ட் வந்து