Posts

Showing posts from May, 2021

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...

Views
Image
என்னுடைய அனுபவக் குறிப்புகளுக்குள் செல்லும்முன் முதலில் இந்த மருத்துவரின் இந்த காணொளியை காணுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, எப்பொழுது மருத்துவமனையை அணுகவேண்டும், என்ன சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என்று எளிதாக, தெளிவாக விளக்குகிறார்.   https://www.youtube.com/watch?v=Z-GP-masaV0   இனி என்னுடைய அனுபவக் குறிப்புகள்   1. இன்றைய தேதியில் காய்ச்சல் வந்தால், அது பெரும்பாலும் கொரானா தான்.  உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள். அரசு எடுக்கும் இலவச டெஸ்ட் என்றால் பாசிட்டிவ் என்றால் கார்பரேசனில் இருந்து உங்களை 2 நாட்களுக்குள் போனில் அழைப்பார்கள்.  2 நாட்கள் ஆனாலும் அழைப்பு வரவில்லை என்றால் நெகடிவ் என்று அர்த்தம். (போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்து கொள்ளவும். போனை மனைவி அல்லது மற்றவர்களிடம் தந்து விட்டு நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்). 2. உடனடியாக ரிசல்ட் தேவைப்படுபவர்கள் தனியார் மருத்துவமனை / லேபுகளுக்கு சென்று டெஸ்ட் கொடுங்கள். இடத்தை பொறுத்து ரூ.1000 லிருந்து 2000 வரை ஆகும். அதிகபட்சம் 8 மணி நேரத்திற்குள் பாஸிட்டிவ் அல்லது நெகடிவ் என்று ரிசல்ட் வந்து