பேருவுகை!
சில தினங்களுக்கு முன் குழந்தைகளுக்கு பெருநாள் உடைகள் எடுக்க கோவை, காந்திபுரத்தில் இருக்கும் "ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்" சென்றிருந்தோம். அங்கே அன்று வாடிக்கயாளர்களாக எங்களை போல் ஈதுக்கு துணி எடுக்க வந்த முஸ்லிம்கள் தான் அதிகம் இருந்தனர். துணிகளை எடுத்து, அங்கேயே alteration எல்லாம் கொடுத்து அதை வாங்கி முடிப்பதற்குள் நோன்பு திறக்கும் நேரம் வந்து விடவே.. வீடுக்கு செல்வதற்குள் நேரம் ஆகிவிடும் என்பதால்.. இது போன்ற பெரிய கடைகளில் நோன்பு திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய்பட்டிருக்குமென்பதால் அங்கேயே நோன்பு திறக்க முடிவு செய்தோம்.
நோன்பு திறக்கும் இடத்திற்க்கு நாங்கள் சென்றபோது அங்கு கண்ட காட்சி.. அப்பப்ப்பா.. கண் கொள்ளா காட்சி அது!
அவர்கள் காட்டிய வழியில் நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது முதலில் கடையின் அருகில் ஒரு இடத்தில் கிட்டத்தட்ட முன்னூறு பேர்கள் உட்கார்ந்து நோன்பு திறக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடம் முன்னமே நிரம்பி விட்டிருந்தது. எங்களை பக்கத்தில் இருக்கும் இன்னொரு கட்டடத்தின் முதல் மாடிக்கு போகச் சொன்னார்கள். அங்கேயும் அதே போல் ஒரு மூன்னூறு பேர்கள் அமர்ந்து நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கே எடுத்த படங்களைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.
அங்கே அன்புடன் உணவு பரிமாறிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்கள் தான்.
சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே.. "இட்லி வாங்கிக்க பாய்.., அக்கா சாம்பார் வேணுமா, சாப்பாடு வேணுங்களா.. " என்று ஒவ்வொருவரிடம் சென்று மீண்டும், மீண்டும் பரிமாறி அன்பான உபசரிப்பால் திக்குமுக்கு ஆட வைத்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன ஒரு உபசரிப்பு..! அருமை!!
சாப்பிட்டு முடித்ததும் அங்கே சூப்பர்வைசர் போன்று இருந்தவரிடம் இப்படி நோன்பு திறக்க தினமும் எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டேன்.
கீழே பார்த்த இடத்தில் 300 பேர்களும், நாங்கள் சாப்பிட்ட இடத்தில் ஒரு 250 பேர்களும்.. வார இறுதி நாட்கள் என்றால்.. இக் கட்டடத்தின் இரண்டாவது மாடியிலும் ஒரு 200 பேர்கள் என்று வார இறுதி நாட்களில் ஒரு நாளைக்கு 600 to 700 பேர்கள் வந்து நோன்பு திறப்பார்கள் என்றார்.
தெரியாதவர்களுக்கு ஒரு குறிப்பு.. இது அத்தனையும் இலவசம்..!!
இன்னொரு விஷயம்.. இங்கே நோன்பு திறக்க வருபவர்கள் நம் கடையில் துணி வாங்கியவர்கள் தானா என்றெல்லாம் verify பண்ணாத பெருந்தன்மை குணம்!
நோன்பு திறப்பதற்கு முன் வரும் இறுதி நேரம் முக்கியமானதும், அந்த இறுதி நிமிடங்களில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் (துவாக்கள்) இறைவன் உடனடியாக ஏற்கிறான் என்று இஸ்லாம் கூறுவதால்.. இவர்களின் ஏற்பட்டால் ஏற்கனவே flat ஆகியிருந்த நாங்கள் எங்கள் துவாவில் முதலில் கேட்ட்டது ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்யினர்களுக்குத்தான். அதன் முதலாளிகளுக்கும், ஏற்பாட்டாலர்களுக்கும், பணி புரிவர்களுக்கும் தான்.
கிளம்பும் நேரம் அந்த சூபர்வைசைருக்கும், அங்கிருந்த மற்றவர்களுக்கும் நன்றி சொல்லி கிளம்பி வந்தோம்.
திரும்பி வரும்போது "நோன்பின் ஒரு முக்கிய நோக்கமே. உணவின் அருமையை புரிந்து கொள்ள வேண்டுமென்பதுதான்.. அப்படி இருக்க நம் மக்கள் எவ்வளவு உணவுகளை வீணடிக்கிறார்கள்.." என்று பல தட்டுகளில் உணவுகள் மிச்சமிருப்பதைக் கண்டு என் மனைவி வருந்தியதையும் இங்கே பதிவு செய்து கொள்ள விரும்பிகிறேன்.
திரும்பி வரும்போது "நோன்பின் ஒரு முக்கிய நோக்கமே. உணவின் அருமையை புரிந்து கொள்ள வேண்டுமென்பதுதான்.. அப்படி இருக்க நம் மக்கள் எவ்வளவு உணவுகளை வீணடிக்கிறார்கள்.." என்று பல தட்டுகளில் உணவுகள் மிச்சமிருப்பதைக் கண்டு என் மனைவி வருந்தியதையும் இங்கே பதிவு செய்து கொள்ள விரும்பிகிறேன்.
தமிழகத்தில் ரமலான் மாதம் வந்தாலே தமிழக பள்ளி வாசல்கள் மத வித்தியாசங்கள் ஏதுமின்றி அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கி வருதலும், இது போன்ற முஸ்லிம் அல்லாதவர்கள் நடத்தும் துணிக்கடைகள் துணி எடுக்க வரும் முஸ்லிம்களுக்கு சிறப்பான இஃப்தார் ஏற்பாடுகள் செய்வதும் தமிழகத்தின் சிறந்த மத நல்லிணக்கத்திற்கு சான்றாக தமிழக வரலாற்றில் ஆவணப் படுத்தப்பட வேண்டியவைகள்.
காரில் திரும்பி கொண்டிருந்த போது இந்நிகழ்வை ஃபேஸ்புக்கில் எழுதப் போகிறேன்.. அதற்கு ஒரு தலைப்பும் முடிவு செய்து விட்டேன்.. Guess பண்ணுங்கள் பார்க்கலாம் என்றேன்..
"சமுதாய நல்லிணக்கம்..?" இது மனைவி.
"ஸ்ரீதேவியின் சிறந்த வழி..?" இது மகள்.
"இல்லை.." என்று கூறி நான் சொன்ன தலைப்பு தான் இப்பதிவின் தலைப்பு!! :-)
Hi Rafik, I did not know you could write this beautiful Blog in Tamil.
ReplyDeleteHow long are you writing?
BTW what is the meaning of the Title?
Kodumaya paathiyaa? Even I don't know it's correct meaning.
Ha..ha.. :) :) It means delight or great pleasure. பெரு மகிழ்ச்சி.
Delete