நிலாவுக்குப் பக்கத்தில் ஒரு பலா!
நிலாவைக் காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய காலம் முடிந்தது.. இனி Coca-cola, KFC and McDonalds போன்ற கம்பனிகளின் லோகோக்களை, விளம்பரங்களைக் காட்டி சோறு ஊட்டும் காலம் இது..!
புரியவில்லையா...?
விரைவில் அது போன்ற பெரிய கம்பனிகளின் லோகோக்கள், விளம்பரங்கள் நமக்கு வானத்தில் தெரியப் போகிறது.
Pic credit: The Hindu\Reuters\StartRocket
StartRocket, என்ற ரஸ்யா startup ஒன்று விண்வெளியில் விளம்பரங்களை போடப் போகிறதாம். அதற்காக ஒரு 200 மிகச் சிறிய செயற்கைக்கோள்களை அனுப்பி, அவைகளை ஒரு grid போல ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, அதன் மூலம் சூரிய ஒளியை நமக்கு எதிரொலிக்க செய்து, அதன் மூலம் எழுத்துகளையும், படங்களையும் அங்கிருந்து படம் காட்டப் போகிறார்களாம்.
உதாரணத்திற்கு KFC என்ற எழுத்தை காட்ட வேண்டுமானால்.. K என்ற எழுத்தின் உயரம் மட்டும் 3.75 kms வருமாம்.
சென்ற வாரம் இதற்கான promo வீடியோ விட்டுருக்காங்க.
ஆனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதனை bad idea என்கிறார்கள்.
"ஏறத்தாள 20,000 க்கு மேற்பட்ட மனிதனால் அனுப்பப்பட்ட சாதனங்கள் தற்சமயம் பூமியை சுற்றிக் கொண்டுள்ளன. அவைகளில் வெறும் 10 சதவீதத்திற்கும் கீழே தான் செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள், மற்றவைகள் எல்லாம் காலாவதியான செயற்கைக்கோள்கள், பழைய ராக்கெட்கள் மற்றும் விண்கலங்களின் பாகங்கள். இந்த நிலையில் அறிவியல், பாதுகாப்பு, வணிகம் தொடர்பான விடயங்களைத்தவிர இது போன்ற கலை (விளம்பரம்) தொடர்பான விடயங்களுக்கு எல்லாம் செயற்கைக்கோள்களை அனுப்பவது, விண்வெளியை பயன்படுத்துவது அறிவார்ந்த செயல் அல்ல.." என்கிறார்கள் சில விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
சரி.. நீங்கள் உங்கள் விளம்பரங்களை அங்கே போட விரும்பினால் நீங்கள் செலுத்த வேண்டியது ஒரு எட்டு மணி நேரத்திற்கு 200,000 டாலர்கள் மட்டுமே..! இருக்காதா பின்னே!
அதனால் விரைவில்..
மூனுக்குப் பக்கத்தில் ஒரு மானு (நான் நிஜ மானைச் சொன்னேன்.. 😉), நிலாவுக்குப் பக்கத்தில் ஒரு பலா (இது Jackfruit பலா இல்ல, பBலா முஸீபத்தில் வரும் பலா 😄😄) விரைவில் வரப் போகிறதாம். ("Bala Musibat" is a urdu / hindi word, which means.. trouble & calamity!)
StartRocket ன் promo காணொளி:
கூடுதல் தகவல்கள்:
கூடுதல் தகவல் : The Hindu
இது நாள் வரையில் மனித இனம்...பஞ்சப்பூதங்களில்
ReplyDeleteநிலம், நீர், காற்று ஆகியவற்றை கெடுத்தான்.
ஆகாயத்தை கெடுக்க முற்படுகிறான்.
நெருப்பினை கெடுக்க முடியாதென நினைக்கிறேன். அது தன்னை எரிப்பதை எரிக்கும்.
பேராசை = அழிவு = மனித இனம்.
True. Rightly said Senthil.
Deleteஅந்த பலா முசீபத் கண்கெட்டா தூரத்தில் இருந்தே பிள்ளைகளை ஆட்டி வெக்குது ...கண்ணுக்கெட்டினா ��
ReplyDeleteஹா ஹா.. உண்மை. நன்றி.
Deleteஇப்படியான சர்வீஸை வழங்குபவர்களுக்கு தான் நிறைய பணம் அள்ள போகுது,
ReplyDeleteஅழிவை நோக்கி தான் நமது பயணம் இழுக்கப்படும் / ஈர்க்கப்படும்
அந்தந்த ஜெனரேஷன் ஃபேஸ் செய்யும் சவால்களாக இருக்கும், இருக்கட்டும், அப்பதான் ஒருத்தர் முளைத்து / வெடித்து வெளி வருவார் - வரட்டும் ...
உண்மை. எல்லா இடத்திலும் வணிகத்தை புகுத்தும் நோக்கம் மிகுந்த ஆபத்தானது. கருத்திற்கு நன்றி பாஸ்.
Deleteடெக்னாலஜி டெக்னாலஜின்னு சொல்லியே முன்னேற்றம் காட்டுவது போல் மனித இனத்தின் பாதுகாப்பான வாழ்வுக்கு சவால் விடும் இது
ReplyDeleteபோன்ற டெக்னாலஜிகள் கண்டு அச்சமே வருகிறது..
Agreed.
Delete