கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Views
உலகம் இதுவரை பார்த்திராத ஒரு கொள்ளை நோயையும், அதனால் மனித குலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் நாம் கண் கூடாக கண்டு கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலிலும், இன்னும் வளர்ச்சி அடையாத நாடான இந்தியா போன்ற நம் நாடு ஒரு கொள்ளை நோய் பரவும்போது வரும் படிநிலைகளில் ஏற்கனவே இரண்டாவது கட்டத்தை அடைந்து அடுத்து வரும் மூன்றாவது மற்றும் அபாய கட்டமான Community Transmission என்ற சமூகங்களுக்குள் பரவுதல் என்ற கட்டத்தை  அடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் இந்த முக்கிய காலகட்டத்தில்.. இக்கொள்ளை நோயிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும், நம் வாழும் சமூகத்தையும் காக்க நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பற்றி தான் கீழே சுருக்கமாகவும், காணொளியில் விளக்கமாகவும் சொல்லியிருக்கிறேன்.



  1. தனிமைப் படுத்துதல் (Lock-down/Self-Quarantine): 
    1. முடிந்த அளவு வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்ப்பது.
    2. முடிந்தவர்கள் தனது பணிகளை வீட்டில் இருந்து செய்வது (Work from home).
    3. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது (Avoid non-essential travels).

  2. சமூக விலகல் (Social Distancing): 
    முக்கிய தேவைகளுக்கு வெளியே செல்ல நேர்ந்தால் கூட்டங்கள் இருக்கும் இடங்களுக்கு செல்லாமல் தவிர்ப்பது. (இது எந்தளவு இந்நோய் பரவுவதை தடுக்கும் என்று காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.)

  3. அடுத்தவர்களை சந்திக்கும்போது: 
    1. காய்ச்சல், இருமல் போன்ற தொந்தரவுகள் உள்ள  நபர்களை சந்திப்பதை தவிர்ப்பது. சந்திக்க வேண்டிய கட்டாயம் வந்தால் குறைந்த அளவு பத்து அடி வரை இடைவெளியில் சந்திப்பது.
    2. ஆரோக்கியமாக உள்ளவர்களையும் சந்திக்கும்போது.. கைகுலுக்குதல், அணைத்தல், போன்ற அனைத்து விதமான தொடுதலையும் தவிர்ப்பது. ஆறு அடி இடைவெளியில் நின்று பேசுவது சிறந்தது.  

  4. கைகளை பேணுதல்:  
    1. அடிக்கடி கைகளை ஹேண்ட் வாஸ் அல்லது சோப்பு போட்டு கழுவுதல். வெளியில் இருந்து திரும்பும்போதும், உணவு உண்ணுவதற்கு முன்னும் கட்டாயம் கழுவதல். வழிகாட்டுதல்கள் படி கழுவுதல். 
    2. பொது இடங்களில் இருக்கும்போது கைகளை கவனமாக வைத்திருந்தல். அடிக்கடி பொது இடங்களில் உள்ள பொருட்களை தொடாமல் தவிர்த்தல். 
    3. நம்முடைய கண், மூக்கு, வாய்களை தேவையின்றி  தொடுவதை தவிர்த்தல்.  
    4. வெளியில் இருக்கும்போது கைபேசியை (Smartphone) பயன்படுத்தியிருந்தால் வீட்டிற்கு வந்து கை கழுவதற்கு முன் கைபேசியையும் கிருமி நாசினி (Sanitizer) கொண்டு சுத்தப்படுத்துதல் (deinfecting).   

  5. பெரியவர்களை கூடுதல் கவனுத்துடன் காத்தல்:  
    1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மற்றும் நீரிழிவு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய சம்பந்தப்பட்ட நோய்கள்,  புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வரும் பெரியவர்களை கூடுதல் கவனுத்துடன் காத்தல். 
    2. அவர்கள் வெளியே செல்லுதலை முடிந்த அளவு தவிர்த்தல். 
    3. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் இவர்களை சந்திப்பதை அறவே தவிர்த்தல். 
    4. பெரியவர்களுடன் கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் மற்றவர்கள் தன்னையும் கூடுதல் கவனுத்துடன் கொரானா வந்துவிடாமல் காத்தல்.   
    5. அவர்களுக்கு தேவையான பொருட்களை, மருந்துகளை இளையவர்கள் வாங்கி வந்து தருதல்.  

  6. அறிகுறிகள் தென்படுபவர்கள் / கொரானா தொற்று ஏற்பட்டவர்கள் செய்யவேண்டியது :
    1. முதலில் பயப்பட வேண்டாம், நீங்கள் வீட்டில் நன்றாக ஒய்வு எடுத்தாலே பூரண குணமடைந்து விடுவீர்கள். 
    2. வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும். உங்களால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும்.
    3. இரும்பும்போதும், தும்மும்போதும் கைக்குட்டை கொண்டோ அல்லது கையை மடக்கியோ இரும்புங்கள், தும்புங்கள்.
    4. கொரானாவின் சாதாரண அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு இருந்தால்.. மருத்துவமனை செல்ல வேண்டாம்.. வீடுகளில் நன்றாக ஓய்வு எடுத்தாலே போதும். தீவிர அறிகுறியான மூச்சு திணறல் ஏற்பட்டால்  நீங்கள் சுகாதாரத்துறையின் அவசர உதவி எண்ணான 104 அழைத்தால் அவர்களே உங்களை வந்து அழைத்து செல்வார்கள்.    

  7. பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல்:
    1. பல தொழில்களும் முடங்கியுள்ளதால் அவகைளை நம்பி வாழும் தினசரி தொழிலார்களின் வாழ்வாதாரத்திற்காக உதவுவது. 

  8. இந்த நேரத்தில் மருத்துவ துறை ஊழியர்களுக்கும், அரசுக்கும் முழு ஒத்துழைப்பு தருவது:
    1. இந்த இக்கட்டான நேரத்தில் தன் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வரும்  மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அனைத்து மருத்துவ துறை ஊழியர்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பது, நன்றி செலுத்துவது. 
    2. அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தருவது.

    #COVID19 #COVID19India #Coronavirus 

    Comments

    Popular posts from this blog

    தவறான முன்னுதாரணம்..!

    நிலாவுக்குப் பக்கத்தில் ஒரு பலா!

    கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...