Posts

Showing posts from 2019

தவறான முன்னுதாரணம்..!

Views
Image
Yes, The smallest coffins are the heaviest! :(   ஒரு இரண்டு வயதுக் குழந்தை இந்த மொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக துடித்து இறந்திருக்கிறது.  இந்த துயர சம்பவத்திற்கு யார் காரணம் என்று எந்த ஒரு சரியான விசாரணையும் மேற்கொள்ளாமல் சிறுவனின் பெற்றோர்களுக்கு நிதி வழங்கியது ஒரு தவறான முன்னுதாரணம்.  இது ஏதோ.. அரசால் பொது இடத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணறில் விழுந்து அக்குழந்தை இறக்கவில்லை.  மாறாக குழந்தை தன் பெற்றோர்களின் சொந்த நிலத்தில் அவர்களால் போடப்பட்ட கிணறில் விழுந்து இறந்திருக்கிறது.  அதனால் பெற்றோர்களின் அலட்சியம் தான் இதற்க்கு காரணம், அதனால் அவர்கள்  தண்டிக்கப் படவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.  இல்லை.. இது தெரியாமல் நடந்த விபத்து, இதற்கு பெற்றோர்களைக் காரணமாக்க முடியாது என்று வேறு சிலரும் கூறுகிறார்கள். பெற்றோர்களும் அது ஏழு வருடத்திற்கு முன்பாக போடப்பட்டு பிறகு மூடப்பட்ட ஆழ்துளை கிணறு. அதன் மேல் ட்ராக்டர் எல்லாம் ஒட்டி இருக்கிறோம்.  சமீபத்தில் பெய்த மழையால் தான் அந்தப் பகுதியின் மண் உள்வாங்கி அதனால் மீண்டும் திறந்து கொண்டது என்கிறார்கள்

சந்திரயான் 2 க்காக தமிழகம் தந்த 'கொஞ்சம் நிலவு'!

Views
Image
இதுவரை எந்த நாடும் சென்றிராத நிலவின் தென் துருவப் பகுதிக்கு ஆய்வுகள் செய்ய முதன் முதலில் செல்லும் சந்திரயான் 2   விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியர்கள் அனைவரும் மட்டுமல்ல, விண்வெளியின் அதியசங்களை, இரகசியங்களை தெரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு மனிதனும் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்றால் அது மிகையாகாது.  அதற்காக உழைத்த இஸ்ரோவின் (ISRO) அனைத்து உறுப்பினர்களுக்கும், உறுதுணையாக நின்ற அனைவருக்கும் பாராட்டுகள் உரித்தாகட்டும்.   இந்த திட்டத்தின் நோக்கம் என்ன, ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது, எப்படி இது வேறு யாரும் செய்திராதது போன்ற தகவல்களைப் பற்றியெல்லாம் நாம் இங்கே பேசப் போவதில்லை. அவைகளைப் பற்றி தெரியாதவர்கள் வேறு செய்தி தளங்களில் படித்துக் கொள்ளலாம்.  ஆனால்.. இந்த மகிழ்ச்சிகரமான வேளையில்.. இந்த சாதனை பயணத்திற்கான ஏற்பாடுகளில் நடந்த ஒரு சுவராஸ்யமான,  குறிப்பாக தமிழர்கள் மகிழக்கூடிய ஒரு சம்பவத்தை பற்றித் தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.    சந்திரயான்  2 விண்ணில் ஏவப்படும் காட்சி நிலவுக்கு சென்று ஆய்வு செய்யும் சந்திரயான் 2 செயலாக்கம் (mission) என்பது நான

சிஸ்டம் எவ்வளவு சரியில்லை என்று தெரியுமா..???

Views
Image
சிஸ்டம் சரியில்லைதான். ஆனால் அது எவ்வளவு சரியில்லை என்று தெரியுமா..? சம்பவம் 1: குப்பைகளை எடுக்கும் மாநகராட்சி தொழிலாளர்களின் உடையில் எழுதியிருந்த "குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரியுங்கள்" என்ற வாசகத்தை கண்டு... அப்படி பிரிக்காமல் மக்கும் குப்பை மற்றும் (பிளாஸ்டிக் போன்ற) மக்கா குப்பை என்று அனைத்தையும் நாம் சேர்த்தே போடுவதால் அதனை பின்னால் பிரிப்பவர்களுக்கு ஏற்படும் சிரமமும், அதனால் அரசுக்கும், பூமிக்கும் ஏற்படும் நஷ்டங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு அவ்வாசகத்தை கண்ட அன்றே மனைவி, மக்களை அழைத்து தரம் பிரிப்பதன் தேவைகளை வலியுறித்தி இரண்டு குப்பை கூடைகளை (Dust bins) வைத்து அதனை வீட்டில் செயல்படுத்தி விட்டோம்.  பிள்ளைகளும், நாங்களும் ஆர்வமாக குப்பைகளை போடும்போதே தரம் பிரித்து போட்டு வந்து.. குப்பை வண்டி வந்ததும், அவர்களிடம் இரண்டு கூடைகளையும் கொண்டு போய் கொடுத்தால்.. அதனை இரண்டையும் வாங்கி வண்டியில் ஒரே குப்பையில் போடுகிறார்கள்.. ஏன் என்று கேட்டால்.. அப்படி தரம் பிரித்து வாங்கும் வண்டி FC க்கு சென்றுள்ளதாம்.. அது வரும் வரை இவ்வண்டியில் தான் வாங்குவார்களாம்.   

பேருவுகை!

Views
Image
சில தினங்களுக்கு முன் குழந்தைகளுக்கு பெருநாள் உடைகள் எடுக்க கோவை, காந்திபுரத்தில் இருக்கும் "ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்" சென்றிருந்தோம்.  அங்கே அன்று வாடிக்கயாளர்களாக எங்களை போல் ஈதுக்கு துணி எடுக்க வந்த முஸ்லிம்கள் தான் அதிகம் இருந்தனர்.  துணிகளை எடுத்து, அங்கேயே alteration எல்லாம் கொடுத்து அதை வாங்கி முடிப்பதற்குள் நோன்பு திறக்கும் நேரம் வந்து விடவே.. வீடுக்கு செல்வதற்குள் நேரம் ஆகிவிடும் என்பதால்.. இது போன்ற பெரிய கடைகளில் நோன்பு திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய்பட்டிருக்குமென்பதால் அங்கேயே நோன்பு திறக்க முடிவு செய்தோம்.  நோன்பு திறக்கும் இடத்திற்க்கு நாங்கள் சென்றபோது அங்கு கண்ட காட்சி.. அப்பப்ப்பா.. கண் கொள்ளா காட்சி அது!  அவர்கள் காட்டிய வழியில் நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது முதலில் கடையின் அருகில் ஒரு இடத்தில் கிட்டத்தட்ட முன்னூறு பேர்கள் உட்கார்ந்து நோன்பு திறக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அந்த இடம் முன்னமே நிரம்பி விட்டிருந்தது.  எங்களை பக்கத்தில் இருக்கும் இன்னொரு கட்டடத்தின் முதல் மாடிக்கு போகச் சொன்னார்கள்.  அங்கேயும் அதே போல் ஒரு மூன்னூற

நிலாவுக்குப் பக்கத்தில் ஒரு பலா!

Views
Image
நி லாவைக் காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய காலம் முடிந்தது..  இனி Coca-cola, KFC and McDonalds போன்ற கம்பனிகளின் லோகோக்களை, விளம்பரங்களைக் காட்டி சோறு ஊட்டும் காலம் இது..! புரியவில்லையா...? விரைவில் அது போன்ற பெரிய கம்பனிகளின் லோகோக்கள், விளம்பரங்கள் நமக்கு வானத்தில் தெரியப் போகிறது.   Pic credit: The Hindu\Reuters\StartRocket StartRocket , என்ற ரஸ்யா startup ஒன்று விண்வெளியில் விளம்பரங்களை போடப் போகிறதாம்.  அதற்காக ஒரு 200 மிகச் சிறிய செயற்கைக்கோள்களை அனுப்பி, அவைகளை ஒரு grid போல ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, அதன் மூலம் சூரிய ஒளியை நமக்கு எதிரொலிக்க செய்து, அதன் மூலம் எழுத்துகளையும், படங்களையும் அங்கிருந்து படம் காட்டப் போகிறார்களாம். உதாரணத்திற்கு KFC என்ற எழுத்தை காட்ட வேண்டுமானால்.. K என்ற எழுத்தின்  உயரம் மட்டும் 3.75 kms வருமாம். சென்ற வாரம் இதற்கான promo வீடியோ விட்டுருக்காங்க. ஆனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதனை bad idea என்கிறார்கள்.  "ஏறத்தாள 20,000 க்கு மேற்பட்ட மனிதனால் அனுப்பப்பட்ட சாதனங்கள் தற்சமயம் பூமியை சுற்றிக் கொ