Posts

சாபம் இறங்கப்படலாம்!

Views
Image
இதோ இந்த வருடமும் மூன்று குழந்தைகள் இறந்திருக்கிறது.  மூன்றும் நன்றாக படித்து வந்த ஏழைக் குழந்தைகள்.  தம் ஏழைக் குடும்பங்களின்  எதிர்காலத்திற்காக அப்பிள்ளைகள் சுமந்திருந்த எத்தனையோ கனவுகள், தன் துயரங்களை எல்லாம் துடைக்கப் போகிறார்கள் என்று அந்த குடும்பங்கள்  வைத்திருந்த எத்தனையோ நம்பிக்கைகள், கண்டிருந்த கனவுகள் எல்லாம் இதோ நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது!! Pic source: BBC Tamil கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் இது நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு வரும்போது நமக்கும் சேர்த்து பதட்டம் தொற்றிக் கொள்கிறது.  ஒன்றல்ல.. இரண்டல்ல.. இந்த ஐந்து  ஆண்டுகளில் நீட் தொடர்பாக இதுவரை 16 மாணவர்கள் மாண்டிருக்கிறார்கள் என்பதனை எப்படி நம்மால் சுலபமாக கடந்து செல்ல முடிகிறது...?? ஒவ்வொரு ஆண்டும்  இந்த செய்திகள் கேள்விப்படும்போது நம் மனநிலையும் சேர்ந்து  பாதிப்புக்குள்ளாகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா..? எவ்வளவு எதிர்மறையான சூழலில் நாம் வாழ்கிறோம்..! அத்தனையும் அப்பாவி குழந்தைகள்.. அந்த குடும்பத்தின், இந்த நாட்டின், இந்த நாட்டு மக்களின் வருங்கால செல்வங்கள்..!!!  ப்ச்ச்... அவர்களும் நம் பிள்ளைகள் போன

ஏன் இந்த தயக்கம்..?

Views
Image
PSBB பள்ளி விவகாரத்தை முதலில் வெளியில் கொண்டு வந்தது ஒரு முன்னாள் மாணவி, அதற்குப் பிறகு சென்னை சேத்துப்பட்டு மஹாரிஷி வித்யா மந்திர் என்ற பள்ளியின் ஆசிரியர் மீது பாலியல் புகார்களை கொடுத்ததும் முன்னாள் மாணவர்கள், அதே போல் மேட்டுப்பாளையம் SSVM என்ற பள்ளியின் ஒரு ஆசிரியர் ஒரு முன்னாள் மாணவியுடன் ஃபேஸ்புக்கில் நடத்திய பாலியல் அரட்டையைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியதும் அந்த முன்னாள் மாணவி தான்.  இந்த புகார்களில் எல்லாம் ஒரு முக்கிய விஷயத்தை கவனித்தீர்களா..? இந்த சில நாட்களில் வெளிவந்த பெரும்பாலனா புகார்களை சொன்னது எல்லாமே முன்னாள் மாணவிகள் தான்! அப்படி என்றால் அந்த ஆசிரியர்களைப் பற்றி ஏன் இந்நாள் மாணவிகள் யாரும் வாய் திறக்கவில்லை..?  அவைகள் இப்போது நடப்பது இல்லையா அல்லது இந்நாள் மாணவிகளுக்கு அதனை வெளியே சொல்ல பயமா..? இந்த செய்திககளைப் பார்த்ததும் எனக்கு உடனே எழுந்த கேள்வி இது தான்.  Image source: drsuneettayal.com/Google images PSBB விவகாரத்தில் இந்நாள் மணவிகள் தான் அந்த முன்னாள் மாணவிக்கு புகார்களை கொண்டு சென்று, பிறகு அம்மாணவி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அது வைரல் ஆகி, பலராலும் கண்டிப்ப

கொரானா வந்து வீட்டில் தனிமைப்படுத்துதல் - சில அனுபவக் குறிப்புகள்...

Views
Image
என்னுடைய அனுபவக் குறிப்புகளுக்குள் செல்லும்முன் முதலில் இந்த மருத்துவரின் இந்த காணொளியை காணுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, எப்பொழுது மருத்துவமனையை அணுகவேண்டும், என்ன சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என்று எளிதாக, தெளிவாக விளக்குகிறார்.   https://www.youtube.com/watch?v=Z-GP-masaV0   இனி என்னுடைய அனுபவக் குறிப்புகள்   1. இன்றைய தேதியில் காய்ச்சல் வந்தால், அது பெரும்பாலும் கொரானா தான்.  உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள். அரசு எடுக்கும் இலவச டெஸ்ட் என்றால் பாசிட்டிவ் என்றால் கார்பரேசனில் இருந்து உங்களை 2 நாட்களுக்குள் போனில் அழைப்பார்கள்.  2 நாட்கள் ஆனாலும் அழைப்பு வரவில்லை என்றால் நெகடிவ் என்று அர்த்தம். (போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்து கொள்ளவும். போனை மனைவி அல்லது மற்றவர்களிடம் தந்து விட்டு நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்). 2. உடனடியாக ரிசல்ட் தேவைப்படுபவர்கள் தனியார் மருத்துவமனை / லேபுகளுக்கு சென்று டெஸ்ட் கொடுங்கள். இடத்தை பொறுத்து ரூ.1000 லிருந்து 2000 வரை ஆகும். அதிகபட்சம் 8 மணி நேரத்திற்குள் பாஸிட்டிவ் அல்லது நெகடிவ் என்று ரிசல்ட் வந்து

நம்ம வீட்டுப் பிள்ளை

Views
Image
"சொந்தங்களை மாதிரி யாரும் சந்தோசப்படுத்தவும் முடியாது.. சொந்தங்களை மாதிரி யாரும் கஷ்டப்படுத்தவும் முடியாது..!!" இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு ஞாயிறு அன்று பல நாட்களுக்குப் பின்னால் எங்கள் நெருங்கிய சொந்தங்களுடன் பெற்றோர்கள் வசிக்கும் வீட்டில் ஒரு கேதரிங் நடந்தது.  அனைவரும் சேர்ந்து படம் பார்த்து வெகு நாட்கள் ஆனதால் மதிய உணவுக்குப் பிறகு OTT யில் ஒரு படம் பார்க்க முடிவு செய்தோம். அப்போது இந்தப் படம் என்னுடைய அக்கா மகளாலும், அவருடைய கணவராலும் என்னிடம் பரிந்துரைக்கப்பட்டது.  இப்படம் ரிலீஸ் ஆனபோதே அக்கா மகளும், சொந்தங்களில் உள்ள சில இளவட்டங்களும் என்னிடம் இப்படத்தைப் பார்க்க சொன்ன போது.. காரணம் கேட்டதற்கு.. அண்ணன் - தங்கை பாசம் கதை என்றார்கள்.. "ம்க்கும்.. எவன் இதற்கெல்லாம் *நேரத்தை வேஸ்ட்* பண்ணுவான்..!!" என்று மனதில் எண்ணிக்கொண்டு அந்த ஒரு காரணத்திற்காகவே அப்படத்தை தவிர்த்து வந்தேன். ஆனால் அன்றும் அப்படம் பரிந்துரைக்கப்பட்டது. நான் ஒரு காமடி படம் பாக்கலாம் என்றேன், மனைவி வழக்கம்போல் திரில்லர் என்றார், அம்மாவும் ஏற்கனவே இப்படம் பார்த்து விட்டதால் வேண்டாம் என்றார், ஆனாலும

ஆன்லைன் வகுப்பு அட்டகாசங்கள்..!

Views
அன்று காலை மேக மூட்டத்துடன் சிறிதாக தூறிக் கொண்டிருந்தது.. ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் இளைய மகளின் வகுப்பு தோழிகளின் வாட்ஸ்அப் க்ரூப்பில் தோழி ஒருத்தி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தாள்.. "இன்னைக்கு க்ளாஸ் இருக்கா...???"    😂😂 ****** எதிரே உட்கார்ந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த பெரிய மகள் திடீரேன்று சிரித்தார்... "என்னம்மா ஆச்சு...?" "இல்ல வாப்பா.. சார் அங்க யூடூப் ஓப்பன் பன்றார்.. எர்துகிருள் உருது வருது வாப்பா.. அப்போ அவரும் எர்துகிருள் பாக்கறாரா...???" 😀😀 ******  "இவளக ஒன்னு.. எந்த ரூமுக்கு போனாலும் வீடியோவை ஆன் பண்ணிட்டு மனுசன ஃப்ரீயா போக வர விடாம...." என்று  மகள்களை நொந்து கொண்டே ஸ்கார்ப் தேடும் மனைவி.   அதாவது பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளின் போது பேக்ரவுண்டில் சில அப்பாக்கள் டிங்கினி மங்கினியாக கூட உலா வரமுடியும்.. ஆனால் அம்மாக்கள் வீட்டில் அணியும் சாதாரண ஆடையில் கூட உலா வரமுடியாது என்று சொல்லாமல் சொல்லி செல்கிறார் மனைவி.   😊😊 ******  எங்கள் tenant வீடு ஒன்றிற்கு ஒ

கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Views
Image
உலகம் இதுவரை பார்த்திராத ஒரு கொள்ளை நோயையும், அதனால் மனித குலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் நாம் கண் கூடாக கண்டு கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலிலும், இன்னும் வளர்ச்சி அடையாத நாடான இந்தியா போன்ற நம் நாடு ஒரு கொள்ளை நோய் பரவும்போது வரும் படிநிலைகளில் ஏற்கனவே இரண்டாவது கட்டத்தை அடைந்து அடுத்து வரும் மூன்றாவது மற்றும் அபாய கட்டமான Community Transmission என்ற சமூகங்களுக்குள் பரவுதல் என்ற கட்டத்தை  அடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் இந்த முக்கிய காலகட்டத்தில்.. இக்கொள்ளை நோயிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும், நம் வாழும் சமூகத்தையும் காக்க நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பற்றி தான் கீழே சுருக்கமாகவும், காணொளியில் விளக்கமாகவும் சொல்லியிருக்கிறேன். தனிமைப் படுத்துதல் (Lock-down/Self-Quarantine):   முடிந்த அளவு வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்ப்பது. முடிந்தவர்கள் தனது பணிகளை வீட்டில் இருந்து செய்வது (Work from home). தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது (Avoid non-essential travels). சமூக விலகல் (Social Distan

தவறான முன்னுதாரணம்..!

Views
Image
Yes, The smallest coffins are the heaviest! :(   ஒரு இரண்டு வயதுக் குழந்தை இந்த மொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக துடித்து இறந்திருக்கிறது.  இந்த துயர சம்பவத்திற்கு யார் காரணம் என்று எந்த ஒரு சரியான விசாரணையும் மேற்கொள்ளாமல் சிறுவனின் பெற்றோர்களுக்கு நிதி வழங்கியது ஒரு தவறான முன்னுதாரணம்.  இது ஏதோ.. அரசால் பொது இடத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணறில் விழுந்து அக்குழந்தை இறக்கவில்லை.  மாறாக குழந்தை தன் பெற்றோர்களின் சொந்த நிலத்தில் அவர்களால் போடப்பட்ட கிணறில் விழுந்து இறந்திருக்கிறது.  அதனால் பெற்றோர்களின் அலட்சியம் தான் இதற்க்கு காரணம், அதனால் அவர்கள்  தண்டிக்கப் படவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.  இல்லை.. இது தெரியாமல் நடந்த விபத்து, இதற்கு பெற்றோர்களைக் காரணமாக்க முடியாது என்று வேறு சிலரும் கூறுகிறார்கள். பெற்றோர்களும் அது ஏழு வருடத்திற்கு முன்பாக போடப்பட்டு பிறகு மூடப்பட்ட ஆழ்துளை கிணறு. அதன் மேல் ட்ராக்டர் எல்லாம் ஒட்டி இருக்கிறோம்.  சமீபத்தில் பெய்த மழையால் தான் அந்தப் பகுதியின் மண் உள்வாங்கி அதனால் மீண்டும் திறந்து கொண்டது என்கிறார்கள்