ஆன்லைன் வகுப்பு அட்டகாசங்கள்..!
அன்று காலை மேக மூட்டத்துடன் சிறிதாக தூறிக் கொண்டிருந்தது..
ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.
நான்காம் வகுப்பு படிக்கும் இளைய மகளின் வகுப்பு தோழிகளின் வாட்ஸ்அப் க்ரூப்பில் தோழி ஒருத்தி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தாள்..
"இன்னைக்கு க்ளாஸ் இருக்கா...???"
😂😂
******
எதிரே உட்கார்ந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த பெரிய மகள் திடீரேன்று சிரித்தார்...
"என்னம்மா ஆச்சு...?"
"இல்ல வாப்பா.. சார் அங்க யூடூப் ஓப்பன் பன்றார்.. எர்துகிருள் உருது வருது வாப்பா.. அப்போ அவரும் எர்துகிருள் பாக்கறாரா...???"
😀😀
******
"இவளக ஒன்னு.. எந்த ரூமுக்கு போனாலும் வீடியோவை ஆன் பண்ணிட்டு மனுசன ஃப்ரீயா போக வர விடாம...." என்று மகள்களை நொந்து கொண்டே ஸ்கார்ப் தேடும் மனைவி.
அதாவது பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளின் போது பேக்ரவுண்டில் சில அப்பாக்கள் டிங்கினி மங்கினியாக கூட உலா வரமுடியும்.. ஆனால் அம்மாக்கள் வீட்டில் அணியும் சாதாரண ஆடையில் கூட உலா வரமுடியாது என்று சொல்லாமல் சொல்லி செல்கிறார் மனைவி. 😊😊
******
எங்கள் tenant வீடு ஒன்றிற்கு ஒரு வேலையாக சென்றிருந்தேன்...
அந்த வீட்டு குழந்தை UKG படிக்கிறது.. விளையாடிக் கொண்டிருந்த அந்த பாப்பாவிடம் நான்..
"பாப்பா.. உனக்கு ஆன்லைன் கிளாஸ் எல்லாம் இல்லையா..?"
உடனே.. அக்குழந்தையின் பாட்டி..
"இருக்கு.. மதியானத்துக்கு மேல அந்த டீச்சர் போரடிக்கிறாங்கன்னு சொல்லி எந்திருச்சு வந்து விளையாடிட்டு இருக்கு..."
😂😂
******
"ரஃபீக்.. you know...?? ஆயிஷாவின் தமிழ் ஆசிரியை தினமும் கிளாஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு மோட்டிவேஷன் ஸ்டோரி சொல்லித்தான் கிளாஸ் ஆரம்பிக்கறாங்க... அருமையா இருக்கு.. இனி மேல் காலைல அவங்க கிளாஸ் எடுக்கற டைம்ல தான் நான் ஒர்கவுட் பண்ண போறேன்.. ஸ்டோரிய கேட்டுட்டே செய்யப் போறேன்.. " - இது மனைவி. That's wow ஆசிரியை.. 😮😮👏
******
******
"Students.. this is doubts clarification time.. whoever having doubts pls unmute and ask..."
"Ma'am.. I have a doubt.."
"Yes xxxx, what's your doubt..?"
"Ma'am, I was absent yesterday.. what did you take yesterday..???"
அந்த ஆசிரியையின் மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன்... 😂😂
******
(One of our favorite voices.. இளைய மகளின் தமிழ் ஆசிரியர்..)
"ரஃபீக்.. குறைக்கர நாய் கடிக்காது என்பதன் அர்த்தம்... குழைகின்ற நாய் கடிக்காது என்பது தான் அப்படி மாறி விட்டதாம்.. அதாவது நம்மோடு பழகி, வாலை ஆட்டி குழைகின்ற நாய் கடிக்காது என்று பொருள்.. ஆகையால் தெருவில குறைக்கிற நாயிடம் எல்லாம் போய் நாம் விளையாடக் கூடாதுங்கறார் தமிழ் ஆசிரியர்.." என்று வீட்டுக்கு உள்ளே நுழையும்போதே தெரு நாய்களை பற்றி எச்சரிக்கிறார் மனைவி.
அந்த தமிழ் ஆசிரியர் சொல்லிக் கொண்டே போகிறார்..
"கண்ணா.. அடுத்த பழமொழி.. 'யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்'. அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா.. நான் சிறிய வயதில் அவ்வளவு வசதி எல்லாம் இல்லை.. அப்போது உங்களை போன்ற வயதில் அருகில் இருக்கும் மாணவனிடம் பென்சில் அல்லது அழிப்பான் கேட்டால் தர மறுப்பவனிடம்.. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்று நானும் சொல்லி இருக்கிறேன்.. ஆனால் அந்த பழமொழியின் உண்மையான அர்த்தம்.. அது யானை கிடையாது.. ஆணை.. அதாவது ஆ + நெய்.. அதாவது பசுவின் நெய். பூனை கிடையாது.. பூ + நெய்.. பூவில் வரும் தேன். அதாவது நாம் இளமையில் பசு நெய்யை உண்போம்.. முதுமையில் தேனோடு மருந்து கலந்து உண்போம்.. இளமையில் ஆநெய், முதுமையில் பூநெய்.. என்பது தான் அப்படி மாறிவிட்டது.." என்று பாடத்தை தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களோடு அழகாக போதித்துக் கொண்டிருக்கிறார் அந்த தமிழ் ஆசிரியர்... அருமை ஆசிரியரே.. 😮😮👏
******
சில ஆசிரியர்களை பற்றி மட்டுமே இங்கே குறிப்பிட்டிருந்தாலும் இப்படி ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு வகையில் ஆன்லைனில் பிள்ளைகளை கற்கவைக்க கடின உழைப்பை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! 👏👏
******
இப்படி பல ரகளைகளும், சுவராஸ்யங்களும் ஆன்லைன் வகுப்புகளில் இருந்தாலும்...
பேச்சு போட்டியில் அழகாக பேசிக்கொண்டிருக்கும் பெரிய மகளின் பேச்சை பாத்ரூமிலிருந்த படியே ஒட்டு கேட்கும் வாய்ப்பும்...,
"Very good Kanishka, Rohan and Fathima.. Children.. let us give them a big round of applause.." என்று இளைய மகளின் ஆசிரியையை கூறும்போது வெவ்வேறு அறைகளில் இருந்த தாயும், தந்தையும் ஓடோடி வந்து தன் பிள்ளை முன்னாள் நின்று, மற்ற மாணவர்களோடு சேர்ந்து கைதட்டி பாராட்டும் வாய்ப்பும் இந்த ஆன்லைன் வகுப்புகளில் தானே உண்டு..!!!
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள்..