ஜமால் ஹாஷோக்கி எங்கே...? - பகுதி 4
#WhereIsJamalKhashoggi சரி.. சவூதி ஒத்திகிருச்சு.. எல்லாப் பிரச்சினையும் முடிஞ்சிருச்சு.. இனி துருக்கியும், மற்ற நாடுகளும், ஊடகங்களும் அவங்கவங்க வேலையை பாக்க போயிருவாங்கங்கன்னு தான் நினைச்சேன்.. ஆனால்.. இதற்குப் பிறகு தான் சினிமாக்களை மிஞ்சும் அளவுக்கு சில அதிர்ச்சிகர புதிய தகவல்கள் எல்லாம் துருக்கியின் புலனாய்வுகளின் மூலம் வெளியே வந்து கொண்டிருக்கிறது. துருக்கியின் முதல் அறிவிப்பு சவூதி அரசாங்கம் “ஹாஷோக்கி இறந்தது ஒரு விபத்து..” என்ற ரீதியில் அறிக்கை வெளியிட்டதர்க்குப் பிறகு அக்டோபர் 18 - 20ம் தேதி வாக்கில் முதன் முதலாக துருக்கி அரசு ஒரு அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறது. அதாவது அக்டோபர் 23ம் தேதி ஹாஷோக்கியின் இறப்பு பற்றி ஒரு Naked truth ஐ அதாவது ஒரு வெட்ட வெளிச்ச உண்மையை உலகிற்கு அறிவிக்க போகிறோம் என்று ஒரு அறிக்கை விட்டது. உலகம் மீண்டும் பரப்பரபாகியது. ஆனால் அதற்க்கு முன்பு அதனை விட மிக அதிர்ச்சியான தகவல் ஒன்று உலகிற்க்கு காத்திருந்தது. துருக்கி சொன்ன அந்த 23ம் தேதிக்காக எல்லாரும் ஆவலுடன் காத்துக் கொண்...