Yes, The smallest coffins are the heaviest! :( ஒரு இரண்டு வயதுக் குழந்தை இந்த மொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக துடித்து இறந்திருக்கிறது. இந்த துயர சம்பவத்திற்கு யார் காரணம் என்று எந்த ஒரு சரியான விசாரணையும் மேற்கொள்ளாமல் சிறுவனின் பெற்றோர்களுக்கு நிதி வழங்கியது ஒரு தவறான முன்னுதாரணம். இது ஏதோ.. அரசால் பொது இடத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணறில் விழுந்து அக்குழந்தை இறக்கவில்லை. மாறாக குழந்தை தன் பெற்றோர்களின் சொந்த நிலத்தில் அவர்களால் போடப்பட்ட கிணறில் விழுந்து இறந்திருக்கிறது. அதனால் பெற்றோர்களின் அலட்சியம் தான் இதற்க்கு காரணம், அதனால் அவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இல்லை.. இது தெரியாமல் நடந்த விபத்து, இதற்கு பெற்றோர்களைக் காரணமாக்க முடியாது என்று வேறு சிலரும் கூறுகிறார்கள். பெற்றோர்களும் அது ஏழு வருடத்திற்கு முன்பாக போடப்பட்டு பிறகு மூடப்பட்ட ஆழ்துளை கிணறு. அதன் மேல் ட்ராக்டர் எல்லாம் ஒட்டி இருக்கிறோம். சமீபத்தில் பெய்த மழையால் தான் அந்தப் பகுதியின் மண் உள்வாங்கி ...
நி லாவைக் காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய காலம் முடிந்தது.. இனி Coca-cola, KFC and McDonalds போன்ற கம்பனிகளின் லோகோக்களை, விளம்பரங்களைக் காட்டி சோறு ஊட்டும் காலம் இது..! புரியவில்லையா...? விரைவில் அது போன்ற பெரிய கம்பனிகளின் லோகோக்கள், விளம்பரங்கள் நமக்கு வானத்தில் தெரியப் போகிறது. Pic credit: The Hindu\Reuters\StartRocket StartRocket , என்ற ரஸ்யா startup ஒன்று விண்வெளியில் விளம்பரங்களை போடப் போகிறதாம். அதற்காக ஒரு 200 மிகச் சிறிய செயற்கைக்கோள்களை அனுப்பி, அவைகளை ஒரு grid போல ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, அதன் மூலம் சூரிய ஒளியை நமக்கு எதிரொலிக்க செய்து, அதன் மூலம் எழுத்துகளையும், படங்களையும் அங்கிருந்து படம் காட்டப் போகிறார்களாம். உதாரணத்திற்கு KFC என்ற எழுத்தை காட்ட வேண்டுமானால்.. K என்ற எழுத்தின் உயரம் மட்டும் 3.75 kms வருமாம். சென்ற வாரம் இதற்கான promo வீடியோ விட்டுருக்காங்க. ஆனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதனை bad idea என்கிறார்கள். "ஏறத்தாள 20,000 க்கு மேற்பட்ட மனிதனால் அனுப்பப்பட்ட சாதனங்கள் தற்...
என்னுடைய அனுபவக் குறிப்புகளுக்குள் செல்லும்முன் முதலில் இந்த மருத்துவரின் இந்த காணொளியை காணுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, எப்பொழுது மருத்துவமனையை அணுகவேண்டும், என்ன சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என்று எளிதாக, தெளிவாக விளக்குகிறார். https://www.youtube.com/watch?v=Z-GP-masaV0 இனி என்னுடைய அனுபவக் குறிப்புகள் 1. இன்றைய தேதியில் காய்ச்சல் வந்தால், அது பெரும்பாலும் கொரானா தான். உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள். அரசு எடுக்கும் இலவச டெஸ்ட் என்றால் பாசிட்டிவ் என்றால் கார்பரேசனில் இருந்து உங்களை 2 நாட்களுக்குள் போனில் அழைப்பார்கள். 2 நாட்கள் ஆனாலும் அழைப்பு வரவில்லை என்றால் நெகடிவ் என்று அர்த்தம். (போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்து கொள்ளவும். போனை மனைவி அல்லது மற்றவர்களிடம் தந்து விட்டு நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்). 2. உடனடியாக ரிசல்ட் தேவைப்படுபவர்கள் தனியார் மருத்துவமனை / லேபுகளுக்கு சென்று டெஸ்ட் கொடுங்கள். இடத்தை பொறுத்து ரூ.1000 லிருந்து 2000 வரை ஆகும். அதிகபட்சம் 8 மணி நேரத்திற்குள் பாஸிட்டிவ் அல்லத...
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள்..