Posts

Showing posts from 2020

நம்ம வீட்டுப் பிள்ளை

Views
Image
"சொந்தங்களை மாதிரி யாரும் சந்தோசப்படுத்தவும் முடியாது.. சொந்தங்களை மாதிரி யாரும் கஷ்டப்படுத்தவும் முடியாது..!!" இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு ஞாயிறு அன்று பல நாட்களுக்குப் பின்னால் எங்கள் நெருங்கிய சொந்தங்களுடன் பெற்றோர்கள் வசிக்கும் வீட்டில் ஒரு கேதரிங் நடந்தது.  அனைவரும் சேர்ந்து படம் பார்த்து வெகு நாட்கள் ஆனதால் மதிய உணவுக்குப் பிறகு OTT யில் ஒரு படம் பார்க்க முடிவு செய்தோம். அப்போது இந்தப் படம் என்னுடைய அக்கா மகளாலும், அவருடைய கணவராலும் என்னிடம் பரிந்துரைக்கப்பட்டது.  இப்படம் ரிலீஸ் ஆனபோதே அக்கா மகளும், சொந்தங்களில் உள்ள சில இளவட்டங்களும் என்னிடம் இப்படத்தைப் பார்க்க சொன்ன போது.. காரணம் கேட்டதற்கு.. அண்ணன் - தங்கை பாசம் கதை என்றார்கள்.. "ம்க்கும்.. எவன் இதற்கெல்லாம் *நேரத்தை வேஸ்ட்* பண்ணுவான்..!!" என்று மனதில் எண்ணிக்கொண்டு அந்த ஒரு காரணத்திற்காகவே அப்படத்தை தவிர்த்து வந்தேன். ஆனால் அன்றும் அப்படம் பரிந்துரைக்கப்பட்டது. நான் ஒரு காமடி படம் பாக்கலாம் என்றேன், மனைவி வழக்கம்போல் திரில்லர் என்றார், அம்மாவும் ஏற்கனவே இப்படம் பார்த்து விட்டதால் வேண்டாம் என்றார், ஆனாலும...

ஆன்லைன் வகுப்பு அட்டகாசங்கள்..!

Views
அன்று காலை மேக மூட்டத்துடன் சிறிதாக தூறிக் கொண்டிருந்தது.. ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் இளைய மகளின் வகுப்பு தோழிகளின் வாட்ஸ்அப் க்ரூப்பில் தோழி ஒருத்தி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தாள்.. "இன்னைக்கு க்ளாஸ் இருக்கா...???"    😂😂 ****** எதிரே உட்கார்ந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த பெரிய மகள் திடீரேன்று சிரித்தார்... "என்னம்மா ஆச்சு...?" "இல்ல வாப்பா.. சார் அங்க யூடூப் ஓப்பன் பன்றார்.. எர்துகிருள் உருது வருது வாப்பா.. அப்போ அவரும் எர்துகிருள் பாக்கறாரா...???" 😀😀 ******  "இவளக ஒன்னு.. எந்த ரூமுக்கு போனாலும் வீடியோவை ஆன் பண்ணிட்டு மனுசன ஃப்ரீயா போக வர விடாம...." என்று  மகள்களை நொந்து கொண்டே ஸ்கார்ப் தேடும் மனைவி.   அதாவது பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளின் போது பேக்ரவுண்டில் சில அப்பாக்கள் டிங்கினி மங்கினியாக கூட உலா வரமுடியும்.. ஆனால் அம்மாக்கள் வீட்டில் அணியும் சாதாரண ஆடையில் கூட உலா வரமுடியாது என்று சொல்லாமல் சொல்லி செல்கிறார் மனைவி.   😊😊 ******  எங்கள் tena...

கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Views
Image
உலகம் இதுவரை பார்த்திராத ஒரு கொள்ளை நோயையும், அதனால் மனித குலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் நாம் கண் கூடாக கண்டு கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலிலும், இன்னும் வளர்ச்சி அடையாத நாடான இந்தியா போன்ற நம் நாடு ஒரு கொள்ளை நோய் பரவும்போது வரும் படிநிலைகளில் ஏற்கனவே இரண்டாவது கட்டத்தை அடைந்து அடுத்து வரும் மூன்றாவது மற்றும் அபாய கட்டமான Community Transmission என்ற சமூகங்களுக்குள் பரவுதல் என்ற கட்டத்தை  அடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் இந்த முக்கிய காலகட்டத்தில்.. இக்கொள்ளை நோயிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும், நம் வாழும் சமூகத்தையும் காக்க நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பற்றி தான் கீழே சுருக்கமாகவும், காணொளியில் விளக்கமாகவும் சொல்லியிருக்கிறேன். தனிமைப் படுத்துதல் (Lock-down/Self-Quarantine):   முடிந்த அளவு வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்ப்பது. முடிந்தவர்கள் தனது பணிகளை வீட்டில் இருந்து செய்வது (Work from home). தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது (Avoid non-essential ...