ஜமால் ஹாஷோக்கி எங்கே...? - பகுதி 3
#WhereIsJamalKhashoggi “தம்பி.. இங்க வா..” “சொல்லுங்கண்ணே..” “உனக்கு ஹாஷோக்கி யார்னு தெரியுமா..?” “தெரியும்னே..” “அவர் உங்கிட்ட என்ன கேட்டிருந்தாரு..?” “விவாகரத்து சர்டிபிகேட் ஒன்னு கேட்டிருந்தாருன்னே..” “அத வாங்க உங்க தூதரகம் வந்தாரா..?” “வந்தாருன்னே..” “சர்டிபிகேட் குடுத்தியா..?” “குடுத்தன்னே..” “சரி.. இந்தா.. அவர் உள்ளே வந்தது கேமராவில் பதிவாகி இருக்கு.. அவரு வெளியே போனது எங்க...?” “அட.. அவரு தான் தூதரகத்தின் உள்ளேயே இல்லையேண்ணே..!!” என்று கவுண்ட மணி - செந்தில் வாழைப்பழ காமடி போல் யார் என்ன கேள்வி கேட்டாலும் சவூதி “அவரு வாங்கிட்டு அப்பவே போயிட்டார்..!” என்று திரும்ப திரும்ப சொன்னதையே கூறிக் கொண்டிருந்தது. தட் “அவரு தான் தூதரகத்தின் உள்ளேயே இல்லையேண்ணே..” மொமென்ட் 😊 [இந்த தொடரின் தொடக்கத்திலேயே போட்டிருக்க வேண்டிய முக்கிய முன் குறிப்பு (Disclaimer) : ( பிளாகில் இக்குறிப்பை முதல் பகுதியிலேயே போட்டுவிட்டேன். இங்க போட்டது FBயில் இருந்து நேரடியாக மூன்றாம் பகுதிக்கு வருபவர்களுக்காக. ) இந்த தொடரில்...