சாபம் இறங்கப்படலாம்!
இதோ இந்த வருடமும் மூன்று குழந்தைகள் இறந்திருக்கிறது. மூன்றும் நன்றாக படித்து வந்த ஏழைக் குழந்தைகள். தம் ஏழைக் குடும்பங்களின் எதிர்காலத்திற்காக அப்பிள்ளைகள் சுமந்திருந்த எத்தனையோ கனவுகள், தன் துயரங்களை எல்லாம் துடைக்கப் போகிறார்கள் என்று அந்த குடும்பங்கள் வைத்திருந்த எத்தனையோ நம்பிக்கைகள், கண்டிருந்த கனவுகள் எல்லாம் இதோ நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது!! Pic source: BBC Tamil கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் இது நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு வரும்போது நமக்கும் சேர்த்து பதட்டம் தொற்றிக் கொள்கிறது. ஒன்றல்ல.. இரண்டல்ல.. இந்த ஐந்து ஆண்டுகளில் நீட் தொடர்பாக இதுவரை 16 மாணவர்கள் மாண்டிருக்கிறார்கள் என்பதனை எப்படி நம்மால் சுலபமாக கடந்து செல்ல முடிகிறது...?? ஒவ்வொரு ஆண்டும் இந்த செய்திகள் கேள்விப்படும்போது நம் மனநிலையும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா..? எவ்வளவு எதிர்மறையான சூழலில் நாம் வாழ்கிறோம்..! அத்தனையும் அப்பாவி குழந்தைகள்.. அந்த குடும்பத்தின், இந்த நாட்டின், இந்த நாட்டு மக்களின் வருங்கால செல்வங்கள்...