ஏன் இந்த தயக்கம்..?
PSBB பள்ளி விவகாரத்தை முதலில் வெளியில் கொண்டு வந்தது ஒரு முன்னாள் மாணவி, அதற்குப் பிறகு சென்னை சேத்துப்பட்டு மஹாரிஷி வித்யா மந்திர் என்ற பள்ளியின் ஆசிரியர் மீது பாலியல் புகார்களை கொடுத்ததும் முன்னாள் மாணவர்கள், அதே போல் மேட்டுப்பாளையம் SSVM என்ற பள்ளியின் ஒரு ஆசிரியர் ஒரு முன்னாள் மாணவியுடன் ஃபேஸ்புக்கில் நடத்திய பாலியல் அரட்டையைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியதும் அந்த முன்னாள் மாணவி தான். இந்த புகார்களில் எல்லாம் ஒரு முக்கிய விஷயத்தை கவனித்தீர்களா..? இந்த சில நாட்களில் வெளிவந்த பெரும்பாலனா புகார்களை சொன்னது எல்லாமே முன்னாள் மாணவிகள் தான்! அப்படி என்றால் அந்த ஆசிரியர்களைப் பற்றி ஏன் இந்நாள் மாணவிகள் யாரும் வாய் திறக்கவில்லை..? அவைகள் இப்போது நடப்பது இல்லையா அல்லது இந்நாள் மாணவிகளுக்கு அதனை வெளியே சொல்ல பயமா..? இந்த செய்திககளைப் பார்த்ததும் எனக்கு உடனே எழுந்த கேள்வி இது தான். Image source: drsuneettayal.com/Google images PSBB விவகாரத்தில் இந்நாள் மணவிகள் தான் அந்த முன்னாள் மாணவிக்கு புகார்களை கொண்டு சென்று, பிறகு அம்மாணவி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அது வைரல் ஆகி, பலர...