நம்ம வீட்டுப் பிள்ளை
"சொந்தங்களை மாதிரி யாரும் சந்தோசப்படுத்தவும் முடியாது.. சொந்தங்களை மாதிரி யாரும் கஷ்டப்படுத்தவும் முடியாது..!!" இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு ஞாயிறு அன்று பல நாட்களுக்குப் பின்னால் எங்கள் நெருங்கிய சொந்தங்களுடன் பெற்றோர்கள் வசிக்கும் வீட்டில் ஒரு கேதரிங் நடந்தது. அனைவரும் சேர்ந்து படம் பார்த்து வெகு நாட்கள் ஆனதால் மதிய உணவுக்குப் பிறகு OTT யில் ஒரு படம் பார்க்க முடிவு செய்தோம். அப்போது இந்தப் படம் என்னுடைய அக்கா மகளாலும், அவருடைய கணவராலும் என்னிடம் பரிந்துரைக்கப்பட்டது. இப்படம் ரிலீஸ் ஆனபோதே அக்கா மகளும், சொந்தங்களில் உள்ள சில இளவட்டங்களும் என்னிடம் இப்படத்தைப் பார்க்க சொன்ன போது.. காரணம் கேட்டதற்கு.. அண்ணன் - தங்கை பாசம் கதை என்றார்கள்.. "ம்க்கும்.. எவன் இதற்கெல்லாம் *நேரத்தை வேஸ்ட்* பண்ணுவான்..!!" என்று மனதில் எண்ணிக்கொண்டு அந்த ஒரு காரணத்திற்காகவே அப்படத்தை தவிர்த்து வந்தேன். ஆனால் அன்றும் அப்படம் பரிந்துரைக்கப்பட்டது. நான் ஒரு காமடி படம் பாக்கலாம் என்றேன், மனைவி வழக்கம்போல் திரில்லர் என்றார், அம்மாவும் ஏற்கனவே இப்படம் பார்த்து விட்டதால் வேண்டாம் என்றார், ஆனாலும...