Posts

Showing posts from August, 2020

ஆன்லைன் வகுப்பு அட்டகாசங்கள்..!

Views
அன்று காலை மேக மூட்டத்துடன் சிறிதாக தூறிக் கொண்டிருந்தது.. ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் இளைய மகளின் வகுப்பு தோழிகளின் வாட்ஸ்அப் க்ரூப்பில் தோழி ஒருத்தி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தாள்.. "இன்னைக்கு க்ளாஸ் இருக்கா...???"    😂😂 ****** எதிரே உட்கார்ந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த பெரிய மகள் திடீரேன்று சிரித்தார்... "என்னம்மா ஆச்சு...?" "இல்ல வாப்பா.. சார் அங்க யூடூப் ஓப்பன் பன்றார்.. எர்துகிருள் உருது வருது வாப்பா.. அப்போ அவரும் எர்துகிருள் பாக்கறாரா...???" 😀😀 ******  "இவளக ஒன்னு.. எந்த ரூமுக்கு போனாலும் வீடியோவை ஆன் பண்ணிட்டு மனுசன ஃப்ரீயா போக வர விடாம...." என்று  மகள்களை நொந்து கொண்டே ஸ்கார்ப் தேடும் மனைவி.   அதாவது பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளின் போது பேக்ரவுண்டில் சில அப்பாக்கள் டிங்கினி மங்கினியாக கூட உலா வரமுடியும்.. ஆனால் அம்மாக்கள் வீட்டில் அணியும் சாதாரண ஆடையில் கூட உலா வரமுடியாது என்று சொல்லாமல் சொல்லி செல்கிறார் மனைவி.   😊😊 ******  எங்கள் tena...