கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உலகம் இதுவரை பார்த்திராத ஒரு கொள்ளை நோயையும், அதனால் மனித குலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் நாம் கண் கூடாக கண்டு கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலிலும், இன்னும் வளர்ச்சி அடையாத நாடான இந்தியா போன்ற நம் நாடு ஒரு கொள்ளை நோய் பரவும்போது வரும் படிநிலைகளில் ஏற்கனவே இரண்டாவது கட்டத்தை அடைந்து அடுத்து வரும் மூன்றாவது மற்றும் அபாய கட்டமான Community Transmission என்ற சமூகங்களுக்குள் பரவுதல் என்ற கட்டத்தை அடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் இந்த முக்கிய காலகட்டத்தில்.. இக்கொள்ளை நோயிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும், நம் வாழும் சமூகத்தையும் காக்க நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பற்றி தான் கீழே சுருக்கமாகவும், காணொளியில் விளக்கமாகவும் சொல்லியிருக்கிறேன். தனிமைப் படுத்துதல் (Lock-down/Self-Quarantine): முடிந்த அளவு வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்ப்பது. முடிந்தவர்கள் தனது பணிகளை வீட்டில் இருந்து செய்வது (Work from home). தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது (Avoid non-essential ...