சந்திரயான் 2 க்காக தமிழகம் தந்த 'கொஞ்சம் நிலவு'!
இதுவரை எந்த நாடும் சென்றிராத நிலவின் தென் துருவப் பகுதிக்கு ஆய்வுகள் செய்ய முதன் முதலில் செல்லும் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியர்கள் அனைவரும் மட்டுமல்ல, விண்வெளியின் அதியசங்களை, இரகசியங்களை தெரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு மனிதனும் பெருமை கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்றால் அது மிகையாகாது. அதற்காக உழைத்த இஸ்ரோவின் (ISRO) அனைத்து உறுப்பினர்களுக்கும், உறுதுணையாக நின்ற அனைவருக்கும் பாராட்டுகள் உரித்தாகட்டும். இந்த திட்டத்தின் நோக்கம் என்ன, ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது, எப்படி இது வேறு யாரும் செய்திராதது போன்ற தகவல்களைப் பற்றியெல்லாம் நாம் இங்கே பேசப் போவதில்லை. அவைகளைப் பற்றி தெரியாதவர்கள் வேறு செய்தி தளங்களில் படித்துக் கொள்ளலாம். ஆனால்.. இந்த மகிழ்ச்சிகரமான வேளையில்.. இந்த சாதனை பயணத்திற்கான ஏற்பாடுகளில் நடந்த ஒரு சுவராஸ்யமான, குறிப்பாக தமிழர்கள் மகிழக்கூடிய ஒரு சம்பவத்தை பற்றித் தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம். சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் காட்சி நிலவுக்கு சென்று ஆய்வு செய்...