Posts

Showing posts from May, 2019

பேருவுகை!

Views
Image
சில தினங்களுக்கு முன் குழந்தைகளுக்கு பெருநாள் உடைகள் எடுக்க கோவை, காந்திபுரத்தில் இருக்கும் "ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்" சென்றிருந்தோம்.  அங்கே அன்று வாடிக்கயாளர்களாக எங்களை போல் ஈதுக்கு துணி எடுக்க வந்த முஸ்லிம்கள் தான் அதிகம் இருந்தனர்.  துணிகளை எடுத்து, அங்கேயே alteration எல்லாம் கொடுத்து அதை வாங்கி முடிப்பதற்குள் நோன்பு திறக்கும் நேரம் வந்து விடவே.. வீடுக்கு செல்வதற்குள் நேரம் ஆகிவிடும் என்பதால்.. இது போன்ற பெரிய கடைகளில் நோன்பு திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய்பட்டிருக்குமென்பதால் அங்கேயே நோன்பு திறக்க முடிவு செய்தோம்.  நோன்பு திறக்கும் இடத்திற்க்கு நாங்கள் சென்றபோது அங்கு கண்ட காட்சி.. அப்பப்ப்பா.. கண் கொள்ளா காட்சி அது!  அவர்கள் காட்டிய வழியில் நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது முதலில் கடையின் அருகில் ஒரு இடத்தில் கிட்டத்தட்ட முன்னூறு பேர்கள் உட்கார்ந்து நோன்பு திறக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அந்த இடம் முன்னமே நிரம்பி விட்டிருந்தது.  எங்களை பக்கத்தில் இருக்கும் இன்னொரு கட்டடத்தின் முதல் மாடிக்கு போகச் சொன்னார்கள்.  அங்கேய...