சிஸ்டம் எவ்வளவு சரியில்லை என்று தெரியுமா..???
சிஸ்டம் சரியில்லைதான். ஆனால் அது எவ்வளவு சரியில்லை என்று தெரியுமா..? சம்பவம் 1: குப்பைகளை எடுக்கும் மாநகராட்சி தொழிலாளர்களின் உடையில் எழுதியிருந்த "குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரியுங்கள்" என்ற வாசகத்தை கண்டு... அப்படி பிரிக்காமல் மக்கும் குப்பை மற்றும் (பிளாஸ்டிக் போன்ற) மக்கா குப்பை என்று அனைத்தையும் நாம் சேர்த்தே போடுவதால் அதனை பின்னால் பிரிப்பவர்களுக்கு ஏற்படும் சிரமமும், அதனால் அரசுக்கும், பூமிக்கும் ஏற்படும் நஷ்டங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு அவ்வாசகத்தை கண்ட அன்றே மனைவி, மக்களை அழைத்து தரம் பிரிப்பதன் தேவைகளை வலியுறித்தி இரண்டு குப்பை கூடைகளை (Dust bins) வைத்து அதனை வீட்டில் செயல்படுத்தி விட்டோம். பிள்ளைகளும், நாங்களும் ஆர்வமாக குப்பைகளை போடும்போதே தரம் பிரித்து போட்டு வந்து.. குப்பை வண்டி வந்ததும், அவர்களிடம் இரண்டு கூடைகளையும் கொண்டு போய் கொடுத்தால்.. அதனை இரண்டையும் வாங்கி வண்டியில் ஒரே குப்பையில் போடுகிறார்கள்.. ஏன் என்று கேட்டால்.. அப்படி தரம் பிரித்து வாங்கும் வண்டி FC க்கு சென்றுள்ளதாம்.. அது வரும் வரை இவ்வண்டியில் தான் வாங்குவார்களாம். ...